தனியார் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டனம்

தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தனியார் மழலையர்,ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி 15 நாள் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ‘அரசுப் பள்ளி ஆசிரியர்களை சனி, ஞாயிறுகளில் பயிற்சியில் ஈடுபடுத்தினால் தேர்வுப்பணிகள் பாதிக்கப்படும். அதனால் பயிற்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது’ எனக் கூறி உள்ளனர்.

Read More

5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.  ‘இம்மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்து விட்டன. ஒருசில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. விரைவில் அந்த மாநிலங்களிடமும் ஒப்புதல் பெறப்படும்’ என்றும் அவர் கூறினார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்’ சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை நிகழ்வில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: ஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதுபோல ஒரு நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய…

Read More

பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை!!!

தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, மாணவர்களின் முழு விபரங்களையும் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு தேர்வுக்கு முன், இந்த பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின், ‘ஆதார்’ எண், மொபைல்போன் எண், பெற்றோர் விபரம், முகவரி, ரத்தப் பிரிவு, கற்பிக்கும் மொழி, கல்வி மேலாண் தகவல் அமைப்பான, ‘எமிஸ்’ எண் ஆகியவை, ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற உள்ளன. இந்த அட்டையில், சிறிய…

Read More

17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்

17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் – விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது வெளியான செய்தியை, இந்தாண்டு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை என்று தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த செய்தி உண்மையல்ல, யாரும் நம்ப வேண்டாம் என அந்த தனியார் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. நன்றி – புதியதலைமுறை.

Read More

மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது

மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது | மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை போக்கவும், ஆலோசனை வழங்கவும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இலவச தொலைபேசி எண் வசதியுடன் உதவி மையம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள்-மாணவிகள், பெற்றோர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தேவையான தகவல்கள், தெளிவுரைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வழியாக தொடர்பு கொள்ளும் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மையத்தின் பயன்பாடுகள் வருமாறு:- போட்டித்தேர்வு * இந்தமையம் மூலம் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் வணிகம், மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகள் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல். *…

Read More

அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக படிக்கலாம் துணைவேந்தர் தகவல்

அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக படிக்கலாம் துணைவேந்தர் தகவல் | சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம் என்று துணைவேந்தர் பி.துரைசாமி கூறினார். சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் துணைவேந்தர் பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் அக்டோபர் 1-ந் தேதி முதல் 7-வது ஊதியக்குழு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிலுவைத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகள் 91 துறைகள் மூலம் கற்பிக்கப்படுகின்றன. அந்தந்த துறை விருப்பப்படி ஆன்லைனில் யாரும் எங்கிருந்தும் படிக்கலாம். வேலைவாய்ப்பை கருதி இந்த வசதி கொண்டு வரப்படுகிறது. இந்த வசதி அடுத்த கல்வி ஆண்டு (2018-2019) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு சிண்டிகேட்டில் அனுமதி பெறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்…

Read More

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை | அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை தாக்கல் செய்தது. நாடு முழுவதும் மருத்துவ கல்விக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு என்ற நுழைவுத்தேர்வை மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) கொண்டுவந்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரியதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த நீட் தேர்வில் வினாத்தாள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருந்ததாக புகார் எழுந்தது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் மிகவும் கடினமானதாக இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில்…

Read More

அரசு பள்ளிகளில் சமூக விரோதிகளை விரட்ட ஒத்துழைப்பு அவசியம்!பெற்றோருக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் அத்துமீறும் சமூக விரோதிகளை விரட்ட, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் மொத்தமாக, 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. நான்கு பள்ளிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து பள்ளிகளும் கிராமப்புற பள்ளிகள்தான். தேவனுார்புதுார், திருமூர்த்திநகர், ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதி பள்ளிகளின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து உள்ளது. அரசின் சார்பில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கென, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம் சார்பில் கல்வியாண்டு தோறும், நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக, அதற்கென தனியான நிதி ஒதுக்கீடு இல்லை.அத்துமீறல் தொடர்கிறதுஇதனால், பல அரசுப்பள்ளிகளும், மாலை நேரத்தில் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பள்ளிகளில்அத்துமீறி நுழைவதும், மது அருந்துவதற்கு, வகுப்பறைகளை பயன்படுத்தும் அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.இதனால், பள்ளிக்குழந்தைகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை…

Read More

Tamilnadu New Draft Syllabus 2017 – Published by TNSCERT

தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியானஅறிக்கைகள் மற்றும் ஒன்று முதல்பன்னிரெண்டு வகுப்பு வரையிலானஅனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால்மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில்வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக்கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரைதங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். Tamilnadu New Draft Syllabus 2017 ( TNSCERT ) – Click here to Download 

Read More