சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
முழு ஊரடங்கு இந்த தடைகள் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதா அதிகரிப்பதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இந்த நிலையில் வரும் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் முடிவை பள்ளிக் கல்வித் துறை எடுத்தது.
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.