‘ஒரே தேசம் – ஒரே பாடத் திட்டம்’ கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

‘ஒரே தேசம் – ஒரே பாடத் திட்டம்’ கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் | நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தைக் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அஷ்வினி உபாத்யாயா. வழக்கறிஞராக இருக்கிறார். இவருடைய மனைவி நீடா உபாத்யாயா தொடக்கப் பள்ளி ஆசிரியை. இவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டம் 21ஏ பிரிவின் நோக்கத்தை அடைய, ஒரே தேசம் – ஒரே கல்வி வாரியம் என்பதை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ என்று கல்வி வாரியங்கள் செயல்படுகின்றன. அத்துடன் மாநிலங்களிலும் தனித்தனியாக கல்வி வாரியங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்குப் பதிலாக நாடு முழுவதும் ஏழை,…

Read More

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் (30.11.2017) முடிகிறது

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் (30.11.2017) முடிகிறது | அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய புதிதாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (30-ம் தேதி) முடிவடைகிறது. தமிழகத்தில் 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாததால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். அவ்வப்போது ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு வழிகளில் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய…

Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்வு மாதத்துக்கு ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்வு மாதத்துக்கு ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும் | மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாதத்துக்கு ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது மாற்றுப்பணிக்கான படியாக (டெபுடேஷன் அலவன்ஸ்), ஒரே ஊருக்குள் பணிக்கு செல்வதாக இருந்தால், அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் என்ற வீதத்தில், மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்சவரம்புடன் வழங்கப்படுகிறது. வேறு ஊருக்கு மாற்றுப்பணியாக சென்றால், அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் என்ற வீதத்தில் மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் என்ற உச்சவரம்புடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான மாற்றுப்பணி படியை மத்திய அரசு 2 மடங்கு உயர்த்தி உள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில் இது கூறப்பட்டுள்ளது. இதன்படி,…

Read More

ESLC 2018 | சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே (29.11.2017) கடைசி நாள்.கூடுதலாக ரூ.500/- செலுத்தி விண்ணப்பிக்கலாம். 8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு கால அட்டவணை

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே (29.11.2017) கடைசி நாள்.கூடுதலாக ரூ.500/- செலுத்தி விண்ணப்பிக்கலாம். 8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு கால அட்டவணை | 2018-ம் ஆண்டுக்கான 8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் நடத்தப்படுகிறது. தேர்வுக்கால அட்டவணை வருமாறு:- ஜனவரி 29-ந்தேதி -தமிழ், 30-ந்தேதி – ஆங்கிலம், 31-ந்தேதி -கணிதம், பிப்ரவரி மாதம் 1-ந்தேதி -அறிவியல், 2-ந்தேதி -சமூக அறிவியல். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும். தேர்வு அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | ESLC – JANUARY 2018 – EXAMINATION TIME TABLE DOWNLOAD | ESLC JANUARY 2018 – PRIVATE CANDIDATE INSTRUCTIONS DOWNLOAD | ESLC JANUARY 2018 – APPLICATION NODAL CENTRE…

Read More

மாணவர் விடுதிகளில்’பயோ மெட்ரிக்’

தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் ‘பயோ மெட்ரிக்’ முறை வருகைப்பதிவை அமல்படுத்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கையில் அவர் கூறியதாவது:தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் 6 மாதங்களாக மாவட்டம்தோறும் பஞ்சமி நிலங்களின் பயன்பாடு குறித்தும், மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய விதத்தில் கிடைத்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் முதலில் பஞ்சமி நிலங்கள் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தாழ்த்தப்பட்டோர் சங்கங்கள் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக கூறியுள்ளன. அவற்றை கண்டறிந்து 2 மாதத்தில் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் விடுதிகளில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கைக்கும், தங்கி இருப்போரின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் உள்ள முறைகேட்டை கண்டறிய ‘பயோமெட்ரிக்’ பதிவுமுறை ‘ஆதார்’ எண்ணுடன் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட…

Read More

உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க, ஓய்வூதியர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate) ஆதார் எண்ணுடன் சேர்த்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்துக்குள் இந்தச் சான்றிதழை அளித்தால்தான் ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் பெற முடியும். இதனிடையே, இந்த ஆண்டு இச்சான்றிதழை சமர்ப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என தகவல் வெளியானதால் ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் கூட்டம் அலைமோது கிறது.இந்நிலையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலீல் சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’விடம்…

Read More

NCERT பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு

”தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,” என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார். மதுரையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், 23வது தேசிய சகோதாயா மாநாடு நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து தருண் விஜய் பேசியதாவது:திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன் முதலில் இறைவனிடம் சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது. நம் வரலாறு, கலாசாரத்துடன் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களையும் உலக அளவில் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஆங்கிலேயர் வகுத்து தந்த கல்வி முறையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாகரிகம், கலாசாரம், பண்பாடு சார்ந்த பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும். தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களை குறிப்பிடாமல், இந்திய வரலாறு…

Read More

பள்ளி சுவர்களில் சித்திரம்:வரையும் பணிகள் தொடக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தமிழகம் முழுவதும், 2,184அரசுப்பள்ளிகளில், சுவர் சித்திரம் வரைய, கடந்த செப்டம்பர் மாதம், 3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில், 132 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, சுவர் சித்திரம் வரையும் திட்டத்திற்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் விதம், 19.50 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது.ஆங்கில வழி வகுப்புகள் கொண்ட அரசுப் பள்ளிகளில், இரண்டு வகுப்பறைகளில் சித்திரங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில வார்த்தை உச்சரிப்பு பயிற்சிக்காக, தாவரங்கள், விலங்குள், பறவைகள், அன்றாடநிகழ்வு சார்ந்து, 16 சுவர் ஓவியங்கள் வரைய மாதிரி படங்கள் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.சிறந்த ஓவியர்கள் கொண்டு, இப்பணியை விரைந்து முடித்து, கற்பித்தல் பணிகளை துவங்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், ’அதிக மாணவர்கள் படிப்பதோடு, இடவசதி கொண்ட,…

Read More

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு | மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது. இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்துவகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, www.swachvidyalaya.com என்ற இணையதளத்தில், பள்ளிகள் சார்பில், புகைப்படங்களுடன் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில், மாவட்ட வாரியாக சிறந்த, 40 பள்ளிகள், ஆன்லைன் மூலமாக, தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய, அனைத்து மாவட்டங்களிலும், குழு அமைக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி மாநில…

Read More

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம் பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம் பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். பிளஸ் 1 பொதுத் தேர்வு : இந்த தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிக கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு பாடங்களுக்கும்,…

Read More