மழை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் வரும் சனிக்கிழமை (03-12-2022)வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பருவமழை தீவிரமடைந்தால் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் விடுமுறை அளித்த நாளில் சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வரும் சனிக்கிழமை 03.12.2022 வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், தொடர் பெருமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அப்பணி நாட்களை ஈடு செய்யும் வகையில்
சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள் கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.