- தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (TNDGE) தமிழ்நாடு SSLC 2023 ஆண்டிற்கான நேரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இன்று, மே 19 அன்று, SSLC (வகுப்பு 10) மற்றும் HSC +1 (வகுப்பு 11)க்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு எஸ்எஸ்எல்சி தேர்வில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
பெரம்பலூர் முதலிடம்
- சிவகங்கை இரண்டாம் இடம்
- விருதுநகர் மூன்றாம் இடம்
- கன்னியாகுமரி நான்காம் இடம்
- தூத்துக்குடி ஐந்தாம் இடம்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
தேர்ச்சி விகிதம் 91.39%
மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%
மாணவர்கள் *88.16%
10ம் வகுப்பு தேர்ச்சி – முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:
- பெரம்பலூர் – 97.67%
- சிவகங்கை – 97.53%
- விருதுநகர் – 96.22%
- கன்னியாகுமரி – 95.99%
- தூத்துக்குடி – 95.58%
10ம் வகுப்பு பாட வாரியான தேர்ச்சி விகிதம்:
- தமிழ் – 95.55%
- ஆங்கிலம் – 98.93%
- கணிதம் – 95.54%
- அறிவியல் – 95.75%
- சமூக அறிவியல் – 95.83%
- தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 9,14,320
- மாணவியர்களின் எண்ணிக்கை :4,55,017
மாணவர்களின் எண்ணிக்கை : 4,59,303
தேர்ச்சி விவரங்கள் தேர்ச்சி பெற்றவர்கள்: 8,35,614 (91.39%)
மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மே-2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணாக்கர்கள் 9,12,620. தேர்ச்சி பெற்றோர் 8,21,994. தேர்ச்சி சதவிகிதம் 90.07%.
கூடுதல் விவரங்கள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,638 இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,502 உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,136.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை :3,718
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை: 1,026
100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை
- ஆங்கிலம் – 89
- கணிதம் – 3,649
- அறிவியல் – 3,584
- சமூக அறிவியல் – 320
மாணவர்கள் tnresults.nic.in, dge1.tn.nic.in, அல்லது dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று தங்களது தேர்வுப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
TN SSLC 10வது முடிவை 2023 சரிபார்ப்பது எப்படி?
- tnresults.nic.in அல்லது இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- SSLC முடிவு பக்கத்திற்குச் செல்லவும்.
- உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
- உள்நுழைந்து உங்கள் முடிவை ஆன்லைனில் சரிபார்க்கவும்.
- முடிவு பக்கத்தை சேமிக்கவும்.
கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வெழுதிய 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.