
10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் தனித்தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 20-04-2022 பிற்பகல் 2 மணி முதல் ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தனித்தேர்வர்கள் இன்று மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12ம் வக்ப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்குகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 ஆம் தேதி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தனித்தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.