தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது.9,38,337 மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.
கொரோனா நோய்த் தோற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எந்தவித நேரடித் தேர்வு நடைபெறாத நிலையில், இந்தாண்டு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்கிறார்கள். காலை 10 மணி முதல், மதியம் 1:15 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வரின் விபரங்கள் பதிவிடவும், வினாத்தாள் வினியோகத்துக்கும் முதல் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடைத்தாளில் விடை எழுத, மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. அடுத்து வரும் நாட்களில், மற்ற பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கின்றன. வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ள பொதுத்தேர்வை 9,38,337 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், ஓராண்டு தேர்வு எழுத தடையும், ஆள் மாறாட்டம் செய்தால், வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் கொள்ளாமல் இயல்பாகவே தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.