புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 11 ஆம் தேதிமாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 11.03.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 16.03.2024 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.
அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும்மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.