என்.டி.ஆர் தேசிய விருதுக்கு ரஜினி, கமல்ஹாசன் தேர்வு ஆந்திர அரசு அறிவிப்பு

என்.டி.ஆர் தேசிய விருதுக்கு ரஜினி, கமல்ஹாசன் தேர்வு ஆந்திர அரசு அறிவிப்பு | ஆந்திர அரசு சார்பில் நந்தி விருதுகள் நேற்று தில் அறிவிக்கப்பட்டன. இதில், என்.டி.ஆர் தேசிய விருதுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2014, 2015, 2016 ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் உட்பட சிறப்பு விருதுகள் நேற்று மாலை ஹைதராபாத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் 2014-ல் சிறந்த நடிகர் பாலகிருஷ்ணா, வில்லன் ஜகபதி பாபு, சிறந்த படம் லெஜண்ட், சிறந்த நடிகை அஞ்சலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 2015-ம் ஆண்டு சிறந்த நடிகர் மகேஷ்பாபு, சிறந்த படம் பாகுபலி, சிறந்த நடிகை அனுஷ்கா, சிறந்த இயக்குநர் ராஜமவுலி, 2016-ம் ஆண்டு சிறந்த படம் பெள்ளி சூபுலு, சிறந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருதுக்கு…

Read More

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லும். மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் பதிவாளர் விளக்கம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லும். மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் பதிவாளர் விளக்கம் | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழக அரசால் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அங்கீகாரத்துடன் தொலைநிலைக் கல்வி முறையிலும், திறந்தநிலைக் கல்வி முறையிலும் டிப்ளமா, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் படிப்புகளில், 10-ம் வகுப்பு, பிளஸ் 2, மூன்றாண்டு பட்டப் படிப்பு என்ற முறையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் பட்டங்கள் அரசு வேலைவாய்ப்புக்குச் செல்லத்தக்கவை என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், இளங்கலை படிப்புகளில் சேர விரும்புவோர் முறையாக இணைப்பு படிப்பில் (Bridge course) தேர்ச்சி பெற்ற பின்னரே படிக்க இயலும். இந்நிலையில்,…

Read More

ஜனவரி 2-ந்தேதி வரை முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 2-ந்தேதி வரை முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் | முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு ஜனவரி 2-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ் வளர்ச்சியை கருத்திற்கொண்டு வளர்ந்துவரும் கணினி யுகத்திற்கேற்ப தமிழ் மொழியை கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படும் என்றும், விருது தொகையாக ரூபாய் ஒரு லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அவ்வறிவிப்பின்படி ஆண்டுதோறும் சிறந்த மென்பொருள் தெரிவு செய்யப்பட்டு மென்பொருளை தயாரித்த தனிநபர் மற்றும் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு தனி நபர், நிறுவனத்திடமிருந்து…

Read More

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு | மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த எல்.முருகானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்துதர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகள், உரிமைகளுக்கு கல்வி நிலையங்கள் மதிப்பளிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.…

Read More

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு!!!

மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

Read More

அரசு அலுவலர்களுக்கு தமிழில் எழுத பயிற்சி நவ.9ல் துவக்கம்!!!

திண்டுக்கல், நவ. 2: அரசு அலுவலர்கள் ஆவணங்களை தமிழில் கையாள்வதற்கான பயிற்சி திண்டுக்கல்லில் வரும் 9ம் தேதி துவங்க உள்ளது. அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், ஆவணங்களை தமிழிலேயே கையாளும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். திண்டுக்கல் மாவட்டத்திற்கான பயிலரங்கம் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் இந்த பயிலரங்கம் நடைபெறும். இதில் தமிழ் வளர்ச்சித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். தமிழில் பதிவேடுகளை கையாளும் விதம், ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைக்கான சரியான தமிழ் வார்த்தைகள், தமிழுக்கான அரசாணை, அலுவல் விதிமுறை உள்ளிட்ட…

Read More

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து | உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும்…

Read More

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு | வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பழுதடைந்த கட்டிடங்கள் பல பள்ளி வளாகங்களில் பழுதடைந்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பல கட்டிடங்கள் இருக்கின்றன. கடந்த காலகட்டங்களில் இதுபோன்ற கட்டிடங்களால் காயங்கள், உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் குறிப்பாக பருவமழை காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத சூழ்நிலையில் அவை கொசு உற்பத்திக்கும் ஏற்றவிதமாக அமைந்துள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களை எல்லாம் அதுபோன்ற கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளதோடு பள்ளி…

Read More