விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார்.
மேலும் இது விம்பிள்டனில் அவரது 6-ஆவது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம் ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 3-ஆவது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார். முன்னதாக அத்தகைய சாதனையை முதல் வீரராக ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 2018-இல் எட்ட அதை ஸ்பெயினின் ரஃபேல்நடால் 2020-இல் எட்டி சமன் செய்தார். தற்போது அந்த 20 கிராண்ட்ஸ்லாம் வரிசையில் ஜோகோவிச்சும் இணைந்துள்ளார்.
உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், இறுதிச்சுற்றில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை போரடி வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Stories
December 2, 2024