
கனமழை மற்றும் புயல் எதிரொலியாக தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 10) பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
தமிழகத்தில் மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் இன்று மாலைக்கு பிறகு வெளியே வரவேண்டாம் என்றும் வாகன ஓட்டிகள் அனாவசியமாக எங்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் எதிரொலியாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
மேலும், காஞ்சிபுரம், விழுப்பரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாளை மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.