
முதுநிலை சட்டப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை, சட்ட பல்கலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும், சீர்மிகு சட்ட கல்லுாரியில், எல்.எல்.எம்., என்ற முதுநிலை சட்டப் படிப்பான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், தகுதியான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நேற்று, www.tndalu.ac.in/ என்ற இணைய தளத்தில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று துவங்கியது; நாளை முடிகிறது. வரும், 8ம் தேதி ஆன்லைன் வழியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஒதுக்கீடு பெற்றவர்கள், வரும் 10ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும் என, பல்கலை அறிவித்துள்ளது.