2018 – 2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது . இத்தேர்விற்கு உரிய அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www . trb . tn . nic . in – ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீ டு செய்து 07 . 02 . 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .
Download BEO Exam Admit Card here….
தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time ) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் ( Original Identity Card ) விண்ண ப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் ( Original Passport size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும் . தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07 . 30 மணிக்குள்ளாகவும் , பிற்பகல் தேர்விற்கு 12 . 30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது . மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சி தேர்வு ( Practice Test / Mock Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் ( Login ID and Password ) பயன்படுத்தி www . trb . tn . nic . in – ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது .
இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது . மேலும் நுழைவுச் சீட்டில் மாவட்டம் / நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது . தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் . தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து மேற்கண்ட அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது.