மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி தற்போது 9 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3 சதவீதத்துடன் சேர்த்து இனி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர். இதற்காக அரசுக்கு ரூ. 9000 கோடி செலவாகும்