செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 11ஆம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. மொகரத்திற்கு ஏற்கனவே செப்டம்பர் 10 ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தலைமைக் காஜி அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் விடுமுறை தேதியை மாற்றி மொகரம் பண்டிகைக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.