இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தேர்வாணையத்தால், வரும், 27ல், கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கு தேர்வு நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 5,047 பேர் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு மையத்துக்குள், மொபைல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கை கடிகாரம் உள்ளிட்ட தகவல் பரிமாற்று உபகரணங்களை பயன்படுத்த அனுமதியில்லை. முறைகேடுகள் நடப்பதை தடுக்க, மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
தேர்வு மையங்கள் வழியாக செல்லும், அனைத்து பஸ்களும், மையங்களின் முன் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது