இன்ஸ்பயர்’ விருதுக்கான போட்டியில் பங்கேற்க, செயல்திட்டங்கள் அனுப்பியவர்களில், 340 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில்,’இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம்’ என்ற பெயரில், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்கும் மாணவர்கள் செயல்திட்ட முன்னுரையோடு, பதிவு செய்யும் பட்சத்தில், தகுதிவாய்ந்த திட்டங்களை படைப்புகளாக்க, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, ஆக., வரை அவகாசம் வழங்கப்பட்டது.பள்ளி வாரியாக சிறந்த, மூன்று படைப்புகள் மட்டுமே, இணையதள முகவரியில் (www.inspireawards-dst.gov.in) பதிவேற்றப்பட்டன. இதில், 300 மாணவர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுக்க, 3 ஆயிரத்து 275 பேர், விருதுக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு, டிச., முதல் வாரத்தில் கண்காட்சி நடத்தப்படும். இதுசார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அந்தந்த பள்ளிகள் வாயிலாக, மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்