தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு அதிகபட்சம் தலா ரூ.3 ஆயிரம் கிடைக்கும் | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் போனசாக ரூ.3 ஆயிரத்தை வழங்கி அரசு உத்தரவிடுகிறது. போனஸ் உச்சவரம்பை ரூ.3 ஆயிரமாக கொண்டு…

Read More