2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 – 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த தேர்விற்கான முடிவுகள் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள்ளும், ஜேஇஇ தேர்வின் இரண்டாம் அமர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள்ளும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யூஜிசி நெட் தேர்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.