
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தாலுகா , ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகிய பிரிவுகளுக்கு 621 காவல் சார்பு ஆய்வாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் தகுதிகள் உடையவர்கள் 30.6.2023ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
காலிப்பணியிட விவரங்கள்
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 1.7.2023ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்
ஊதிய விகிதம் ருபாய் 36,900 முதல் 1,16,600 ரூபாய் வரை தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சீருடை பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
STEP 1 : சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : உங்கள் ஈமெயில் ஐடி உள்ளிட்ட இதர தேவையான சான்றிதல்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
STEP 3 : இணையதளத்தில் லாகின் செய்து உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் வாயிலாகவே பூர்த்தி செய்யவும்.
STEP 4 : பின்னர், தேவையான சான்றிதழ்களை இணைக்கவும்.
STEP 5 : விண்ணப்ப கட்டணத்தை செலுத்திவிட்டு சப்மிட் செய்யவும்.
தேர்வு செய்யும் முறை
- எழுத்து தேர்வு
- மெயின் எழுத்து தேர்வு
- உடல் தேர்வு
- உடல்தகுதி தேர்வு
- சகிப்புத்தன்மை தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- நேர்காணல்
முக்கியமான நாட்கள்
அறிவிப்பு வெளியான நாள் | 5.5.2023 |
விண்ணப்பம் துவங்கும் நாள் | 1.6.2023 |
விண்ணப்ப பதிவு முடியும் நாள் | 30.6.2023 |
அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.