அரசு பள்ளிகளில் சமூக விரோதிகளை விரட்ட ஒத்துழைப்பு அவசியம்!பெற்றோருக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் அத்துமீறும் சமூக விரோதிகளை விரட்ட, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் மொத்தமாக, 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. நான்கு பள்ளிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து பள்ளிகளும் கிராமப்புற பள்ளிகள்தான். தேவனுார்புதுார், திருமூர்த்திநகர், ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதி பள்ளிகளின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து உள்ளது. அரசின் சார்பில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கென, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம் சார்பில் கல்வியாண்டு தோறும், நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக, அதற்கென தனியான நிதி ஒதுக்கீடு இல்லை.அத்துமீறல் தொடர்கிறதுஇதனால், பல அரசுப்பள்ளிகளும், மாலை நேரத்தில் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பள்ளிகளில்அத்துமீறி நுழைவதும், மது அருந்துவதற்கு, வகுப்பறைகளை பயன்படுத்தும் அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.இதனால், பள்ளிக்குழந்தைகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை…

Read More

மாணவர் விடுதிகளில்’பயோ மெட்ரிக்’

தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் ‘பயோ மெட்ரிக்’ முறை வருகைப்பதிவை அமல்படுத்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கையில் அவர் கூறியதாவது:தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் 6 மாதங்களாக மாவட்டம்தோறும் பஞ்சமி நிலங்களின் பயன்பாடு குறித்தும், மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய விதத்தில் கிடைத்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் முதலில் பஞ்சமி நிலங்கள் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தாழ்த்தப்பட்டோர் சங்கங்கள் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக கூறியுள்ளன. அவற்றை கண்டறிந்து 2 மாதத்தில் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் விடுதிகளில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கைக்கும், தங்கி இருப்போரின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் உள்ள முறைகேட்டை கண்டறிய ‘பயோமெட்ரிக்’ பதிவுமுறை ‘ஆதார்’ எண்ணுடன் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட…

Read More

உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க, ஓய்வூதியர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate) ஆதார் எண்ணுடன் சேர்த்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்துக்குள் இந்தச் சான்றிதழை அளித்தால்தான் ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் பெற முடியும். இதனிடையே, இந்த ஆண்டு இச்சான்றிதழை சமர்ப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என தகவல் வெளியானதால் ஓய்வூதியதாரர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் கூட்டம் அலைமோது கிறது.இந்நிலையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலீல் சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘தி இந்து’விடம்…

Read More

NCERT பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு

”தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,” என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார். மதுரையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், 23வது தேசிய சகோதாயா மாநாடு நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து தருண் விஜய் பேசியதாவது:திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன் முதலில் இறைவனிடம் சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது. நம் வரலாறு, கலாசாரத்துடன் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களையும் உலக அளவில் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஆங்கிலேயர் வகுத்து தந்த கல்வி முறையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாகரிகம், கலாசாரம், பண்பாடு சார்ந்த பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும். தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களை குறிப்பிடாமல், இந்திய வரலாறு…

Read More

பள்ளி சுவர்களில் சித்திரம்:வரையும் பணிகள் தொடக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தமிழகம் முழுவதும், 2,184அரசுப்பள்ளிகளில், சுவர் சித்திரம் வரைய, கடந்த செப்டம்பர் மாதம், 3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில், 132 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, சுவர் சித்திரம் வரையும் திட்டத்திற்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் விதம், 19.50 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது.ஆங்கில வழி வகுப்புகள் கொண்ட அரசுப் பள்ளிகளில், இரண்டு வகுப்பறைகளில் சித்திரங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டது. ஆங்கில வார்த்தை உச்சரிப்பு பயிற்சிக்காக, தாவரங்கள், விலங்குள், பறவைகள், அன்றாடநிகழ்வு சார்ந்து, 16 சுவர் ஓவியங்கள் வரைய மாதிரி படங்கள் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.சிறந்த ஓவியர்கள் கொண்டு, இப்பணியை விரைந்து முடித்து, கற்பித்தல் பணிகளை துவங்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், ’அதிக மாணவர்கள் படிப்பதோடு, இடவசதி கொண்ட,…

Read More

Tamilnadu New Draft Syllabus 2017 – Published by TNSCERT

தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியானஅறிக்கைகள் மற்றும் ஒன்று முதல்பன்னிரெண்டு வகுப்பு வரையிலானஅனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால்மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில்வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக்கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரைதங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். Tamilnadu New Draft Syllabus 2017 ( TNSCERT ) – Click here to Download 

Read More

நெட்’ தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

நெட்’ தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது | பேராசிரியர் பணிக்கான, ‘நெட்’ தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. ‘நெட்’ தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள்…

Read More

பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்தை கேட்ட பிறகு புதிய பாடத்திட்டம் பிப்ரவரியில் வெளியிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்தை கேட்ட பிறகு புதிய பாடத்திட்டம் பிப்ரவரியில் வெளியிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | பிப்ரவரியில் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:- ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்ட வரைவு வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை ஒரு தொகுப்பாகவும், பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மற்றொரு தொகுப்பாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த வரைவு பாடத்திட்டத்தை 4 மாத காலத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது இந்தியாவே வியக்கத்தக்க வகையில், தமிழக வரலாற்றில் முக்கிய அம்சமாகும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு ஆண்டாக கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.…

Read More

பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு

பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு | பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி முடிவை அறிவித்தது. வருகிற (நவம்பர்) 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சென்னை தரமணியில் என்ஜினீயரிங் பாடங்களில் தேர்வானவர்களுக்கு நடத்த இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். என்ஜினீயரிங் அல்லாத பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Read More

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில் “National Project Implementation Unit” காலியாக உள்ள 1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 11 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்குபெற்று பயனடையலாம். மொத்த காலியிடங்கள்: 1270 பணி: Assistant Professor துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Civil Engg and allied – 190 2. Mechanical Engg and allied – 191 3. Electrical Engg and allied – 158 4. Electronics Engg and allied – 155 5. Computer Engg/IT and…

Read More