2023 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 1 பிரதான தேர்வு முடிவு வெளியானது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 எனப் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 1 பிரதான தேர்வு முடிவு இன்று வெளியானது. 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் குரூப் 1 பிரதான தேர்வு முடிவு வெளியானது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வு மார்ச் 26 முதல் 28ஆம் தேதி வரை, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.