தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் 8 பாடங்களைப் பயிற்றுவிக்கின்றன. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் 3 பாடங்களே பயிற்றுவிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்றுவது இல்லை. லாபநோக்கில் தனியார் புத்தக நிறுவனங்கள் 4 மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்யும் புத்தகங்களையே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்களிடம் திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் மனதளவில்…

Read More

மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது

மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது | மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை போக்கவும், ஆலோசனை வழங்கவும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இலவச தொலைபேசி எண் வசதியுடன் உதவி மையம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள்-மாணவிகள், பெற்றோர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தேவையான தகவல்கள், தெளிவுரைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வழியாக தொடர்பு கொள்ளும் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மையத்தின் பயன்பாடுகள் வருமாறு:- போட்டித்தேர்வு * இந்தமையம் மூலம் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் வணிகம், மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகள் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல். *…

Read More