
யுஜிசி `நெட்’ தேர்வு ஜூலை 8-ல் நடைபெறும் மார்ச் 6 முதல் விண்ணப்பிக்கலாம் | இந்த ஆண்டுக்கான யுஜிசி `நெட்’ தகுதித்தேர்வு ஜூலை 8-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மார்ச் 6-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தற்போதைய விதிமுறைகளின்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு `நெட்’ அல்லது `ஸ்லெட்’ தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வை யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான நெட் தகுதித்தேர்வு ஜூலை 8-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், சமூகவியல், சட்டம் உள்ளிட்ட கலை மற்றும் மானிடவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் `நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதுகலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் என்றால் 50 சதவீத மதிப்பெண் போதும். தற்போது முதுகலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். `நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது. அதே நேரத்தில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜெஆர்எப்) தகுதி பெறுவதற்கு வயது வரம்பு கடந்த ஆண்டுவரை 28 ஆக இருந்தது. தற்போது அது 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான (எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள்), 3-ம் பாலினத்தவர் மற்றும் பெண்களுக்கு ஜெஆர்எப் தகுதிக்கான வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர்களுக்கும் ஆய்வு அனுபவத்துக்கு ஏற்ப வயது வரம்பு தளர்த்தப்படும். 3-லிருந்து 2 ஆக குறைப்பு ஏற்கெனவே, அறிவித்தபடி, `நெட்’ தேர்வுமுறை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாள்களின் எண்ணிக்கை 3-லிருந்து 2 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. முதல் தாளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆர்வத்தை அறியும் வகையில் 50 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 100. இரண்டாவது தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. இரு தாள்களிலுமே அப்ஜெக்டிவ் முறையிலேயே கேள்விகள் இடம்பெறும். நெட் தேர்வுக்கு www.cbsenet.nic.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் 5-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டத்தை www.ugc.ac.in/net/syllabus.