சேலம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நேற்று முதல் துவங்கி டிசம்பர் 9-ம் தேதி வரை மாநகராட்சி தீவுத்திடலில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இந்த புத்தக கண்காட்சியில் 266-ஸ்டால்கள்.
நிகழ்ச்சி நிரல்களாக அன்றாடம் கருத்தரங்கம், பயிலரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.புத்தக கண்காட்சியின் சிறப்பு என்னவென்றால், ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் அமைத்து, ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை, லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது. இது இன்று உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. சாதாரண கடையில் புத்தகம் வாங்குவதற்கும், புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
புத்தக கடையில் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமே இருக்கும். கண்காட்சியில் பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு நாடுகள், பல்வேறு வகையிலான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் இருப்பதால் ஒவ்வொன்றும் மற்றொன்றை விட வித்தியாசமாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும். ஆகையால் புத்தக வாசகர்களுக்கு புத்தக கண்காட்சியானது இன்றியமையாததாக இருந்து வருகிறது