பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடக்கும், தேசிய புத்தக கண்காட்சி வரும், 15ம் தேதி நிறைவு பெறுகிறது.
பொள்ளாச்சி லயன்ஸ் கிளப், கோவை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், முதலாம் ஆண்டு புத்தக கண்காட்சி, லயன்ஸ் கிளப் வளாகத்தில் வரும், 15ம் தேதி வரை நடக்கிறது. நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி கண்காட்சியை துவக்கி வைத்தார்.
முதல் விற்பனையை, மாவட்ட தலைவர் சண்முகம், தொழில் வர்த்தக சபை செயலாளர் சபரி கண்ணன் துவக்கி வைத்தனர். லயன்ஸ் கிளப் தலைவர் நாகமாணிக்கம் வரவேற்றார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கோவை மண்டல மேலாளர் ரங்கராஜன், மேலாளர் குணசேகர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
வாசிப்பு பழக்கத்தை பரவலாக்கும் நோக்கில் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. குழந்தை நுால்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், இன்டர்நெட், இலக்கியம், நாவல்கள், சிறுநுால் என பல அறிய புத்தகங்கள், பிரபல எழுத்தாளர்கள் எழுதிய அனைத்து விதமான நுால்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
வாசகர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு, 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தினமும் காலை, 9:30 மணி முதல் கண்காட்சி நடைபெறும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.