ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.
இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட தேசிய தேர்வு முகமை, ‘ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி எண்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்’ எனும் இந்த நுழைவுத்தேர்வை நடத்துகிறது.
துறைகள்:
ஸ்கூல் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ், ஸ்கூல் ஆப் லேங்குவேஜ், லிட்ரெச்சர் அண்ட் கல்ச்சுரல் ஸ்டடீஸ், ஸ்கூல் ஆப் சோசியல் சயின்சஸ், ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் ஈஸ்த்தெடிக்ஸ், ஸ்கூல் ஆப் லைப் சயின்சஸ், ஸ்கூல் ஆப் என்விரான்மெண்டல் சயின்சஸ், ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் அண்ட் சிஸ்டம்ஸ் சயின்சஸ், ஸ்கூல் ஆப் பிசிக்கல் சயின்சஸ், ஸ்கூல் ஆப் கம்ப்யூடேஷனல் அண்ட் இண்டெக்ரேட்டிவ் சயின்சஸ், ஸ்கூல் ஆப் பயோடெக்னாலஜி, ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், அடல் பிகாரி வாஜ்பாயீ ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் அண்ட் ஆண்டர்பிரனர்ஷிப், ஸ்பெஷல் சென்டர் பார் இ-லேர்னிங், ஸ்பெஷல் சென்டர் பார் மாலிக்குலர் மெடிசின், ஸ்பெஷல் சென்டர் பார் த ஸ்டடி ஆப் லா அண்ட் கவர்னன்ஸ், ஸ்பெஷல் சென்டர் பார் நானோ சயின்சஸ், ஸ்பெஷல் சென்டர் பார் டிசாஸ்டர் ரிசர்ச், ஸ்பெஷல் சென்டர் பார் த ஸ்டடி ஆப் நார்த் ஈஸ்ட் இந்தியா, ஸ்பெஷல் சென்டர் பார் நேஷனல் செக்யூரிட்டி ஸ்டடீஸ் மற்று ஸ்பெஷல் சென்டர் பார் சிஸ்டம்ஸ் மெடிசின்.
படிப்பு நிலைகள்:
மேற்கண்ட பள்ளிகளில் வழங்கப்படும் ஏராளமான இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகின்றன.
தேர்வு விபரம்:
ஆன்லைன் வாயிலாக மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். &’லேன்’இணைப்பிலான கம்ப்யூட்டர் சார்ந்த தேர்வாக நடத்தப்படுகிறது. இதில், பொதுவாக 100 கேள்விகள் ‘மல்டிபில் சாயிஸ்’ வடிவில் இடம்பெறும். தவறான பதில்களுக்கு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் முறை இல்லை. மாணவர் சேர்க்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இடஒதுக்கீடு உண்டு.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதிலும் மொத்தம் 116 நகரங்களில் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் நுழைவுத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தேர்வு நேரம்: 3 மணிநேரம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 27
தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 20 – 23
விபரங்களுக்கு:
தொலைபேசி: 011-40759000
இ-மெயில்: jnu@nta.ac.in
இணையதளங்கள்: www.nta.ac.in , https://jnuexams.nta.ac.in