
RRB:
திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில், என்.டி.பி.சி., என்ற, தொழில்நுட்ப பணியல்லாத Clerical பணியிடங்களுக்கு, 2019 ஜனவரியில் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம், முதல் கட்ட தேர்வு நடந்தது. அதைத் தொடர்ந்து, ஆறு கட்டங்களாக தேர்வு நடந்துள்ளது. நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை நான்கு நாட்கள் ஏழாம் கட்ட தேர்வு நடக்கிறது.இந்த தேர்வின் வாயிலாக, இளநிலை பிரிவுக்கான எழுத்தர், கணக்காளர், தட்டச்சர், நேரக் காப்பாளர், பயணச்சீட்டு எழுத்தர் உள்ளிட்ட, எட்டு வித பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்.
ரயில்வே அறிவிப்பின்படி, இந்த தேர்வுகள் முடிந்து, பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். கொரோனா தொற்றால், அடுத்தடுத்த கட்ட தேர்வுகளை நடத்த முடியாமல், தற்போது தான் நிறைவடையும் நிலையில் உள்ளது.திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்தின் கீழ், மதுரை கோட்டமும் உள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டம், அஸ்தினாம்பட்டியில் உள்ள பி.டி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி.பல்கலை நகரில் உள்ள செந்தாமரை கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் திருநெல்வேலியில் உள்ள பி.எஸ்.என்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி ஆகிய மூன்று மையங்கள், மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதமே அனுப்பப்பட்டு விட்டதாக, ரயில்வே தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.