சென்னை: பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளவர்கள் இன்று முதல் 27 ம்தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான தேர்வை ரத்து செய்தது. தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டனர். இருப்பினும் அரசு அறிவித்த திட்டத்தின்படி மார்க்குகள் குறைவாக உள்ளதாக கருதுவோர் தனியாக தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இதற்கான விண்ணப்பம் இன்று (23ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. வரும் 27 ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆக.,6 ம் தேதி முதல் 19ம் தேதிவரையில் துணை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதே போல் தனித்தேர்வு எழுதுவோருக்கும் ஆக.,6ம் தேதி முதல் 19 ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படுகிறது.
பொது தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வு மாணவர்கள் துணைத்தேர்வுக்கு என என தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்திற்கு என விண்ணப்பிக்க முடியாது.
கட்டாயமாக அனைத்து பாடத்திற்கும் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வாரியாக அரசுதேர்வுத்துறை சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மார்க்குகளே இறுதியான மார்க்காக கருதப்படும். இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.