பள்ளி கல்வி சார்ந்த பல்வேறு விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுதும், தொடக்க பள்ளி முதல் அனைத்து வகை வகுப்புகளையும் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான (ஐ.சி.எம்.ஆர்) அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க உத்தேசித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பள்ளி கல்வி சார்ந்த பல்வேறு விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அப்போது வரும் 20ஆம் தேதி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறந்து, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.