சென்னை: பள்ளி கல்வித் துறையில் மாற்றப்பட்ட, 37 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் நேற்று பொறுப்பேற்றனர்.
தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வந்த 37 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், இரண்டு நாட்களுக்கு முன் மாற்றப்பட்டனர். அவர்கள் நேற்று தங்களுக்கான புதிய பணியிடங்களில் பொறுப்பேற்றனர்.
பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், ஆன்லைன் வகுப்பு, மாணவர் சேர்க்கை, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில், கவனமுடன் செயல்பட, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.