ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அரை டிரவுசருடன் வகுப்புக்கு வர தடை மத்திய துறைமுகம், சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனை அமைப்பாக, சென்னை, ஐ.ஐ.டி., தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம், சென்னை, ஐ.ஐ.டி.,யில் நடந்தது. இதில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.விழா துவக்கத்தில், தமிழ்த்தாய்வாழ்த்துக்கு பதிலாக, ‘மஹா கணபதி’ பாடல் பாடப்பட்டது சர்ச்சையை எழுப்பிஉள்ளது.அநாகரிகமான உடை
இந்நிகழ்ச்சிக்கு வந்த பல மாணவர்கள், அரைக்கால் டிரவுசர் மற்றும் சாதாரண, ‘டி ஷர்ட்’ அணிந்து பங்கேற்றனர்.மேலும் பலர், நிகழ்ச்சியை கவனிக்காமல், கைகளில் மொபைல் போனுடன், ‘சாட்டிங்’ செய்தபடி இருந்தனர். இது, ஐ.ஐ.டி., பேராசிரியர்களையும், அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இந்நிலையில், அரைக்கால் டிரவுசருடன் நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களை, அந்தந்த துறை பேராசிரியர்கள் எச்சரித்து உள்ளனர்.இனி வரும் காலங்களில், ஐ.ஐ.டி.,யில் நடக்கும் நிகழ்ச்சிகளில்,அநாகரிகமான உடை அணிந்து வரக்கூடாது என, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதற்கிடையில், வகுப்புகளுக்கு கூட மாணவர்கள், அரைக்கால் டிரவுசர் அணிந்து வருவது வாடிக்கையாக உள்ளது.பல கட்டுப்பாடுகள்விடுதியில் தங்கி இருக்கும்மாணவர்கள், உடை மாற்றாமல்கூட வகுப்புக்கு வருவது, ஐ.ஐ.டி., நிர்வாகத்துக்கு தெரிய வந்துஉள்ளது. மாணவர்களின் இந்த செயல், சென்னை, ஐ.ஐ.டி.,யின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஐ.ஐ.டி.,க்கான அரசின் உதவிகள் தடுக்கப்படும்
அபாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இதைத் தொடர்ந்து, வகுப்புகளுக்கு மாணவர்கள் வரவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், ஆடை கட்டுப்பாடு கொண்டு வர, ஐ.ஐ.டி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.சென்னை அண்ணா பல்கலையை போன்று, ஐ.ஐ.டி.,யிலும், மாணவர்கள் வகுப்புகளில் மொபைல் போனை பயன்படுத்த மற்றும் அரைக்கால் டிரவுசர் அணிந்து வர தடை விதிக்கப்பட உள்ளது.மேலும், வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முழுக்கை சட்டை மற்றும், ‘பார்மல்’ பேன்ட் அணிந்து வர வேண்டும் போன்ற, பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.