சென்னை ஐ.ஐ.டி., இந்த ஆண்டு, 1,000த்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு, விண்ணப்பம் அளித்து சாதனை படைத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., மற்றும் இதர இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான காப்புரிமைகளுக்கு பதிவு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் கணக்கிடப்பட்ட ஆய்வின்படி, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் சார்பில், 1,204 காப்புரிமை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில், இரட்டிப்பான எண்ணிக்கை என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்து உள்ளது.