சென்னை பல்கலை. எம்.ஃபில். தேர்வு முடிவு – சென்னை பல்கலைக்கழக எம்.ஃபில். தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் நாளை (21-ம் தேதி) வெளியிடப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எம்.ஃபில். தேர்வுக்கு மே மாதம் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அபராத கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 11-ம் தேதி ஆகும். விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று பதிவாளர் இராம.சீனுவாசன் தெரிவித் துள்ளார்