‘குரூப் – 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு துறைகளில், குரூப் – 4-ல் அடங்கிய, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, பிப்., 21ல் வெளியானது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, செப்., 4 – 6 வரை, கவுன்சிலிங் நடத்தப்படும். செப்., 4ல், ஓணம் பண்டிகைக்காக, சென்னை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், திட்டமிட்டப்படி அன்று கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.