அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல், ௧௫ம் தேதி வரை, ‘துாய்மை இந்தியா’ திட்டம் கொண்டாடப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், ‘துாய்மை இந்தியா’ விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘ஸ்வச்சதா பக்வாடா’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, அனைத்து பள்ளிகளிலும், பள்ளி அலுவலகங்களிலும், இன்று முதல், செப்., ௧௫ வரை, துாய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கொண்டாட வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுரையை பின்பற்றி, துாய்மை வளாகத்தை உருவாக்கவும், துாய்மையின் முக்கியத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சி நடத்தவும், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று முதல், 15ம் தேதி வரை, துாய்மை நிகழ்ச்சிகள் மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.