வால்பாறையில் கன மழை பெய்துவருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18 )விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலுார், பந்தலுார் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செப்.,18) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பந்தலூர் அருகே சேரம் பாடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் காயம் அடைந்தார். பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் குமுளி அருகே கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிப்பெரியார் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் கட்டப்பனை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
கோவை: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.