பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி ஆர்எம்எஸ்ஏ சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 11 முதல் 2-வது கட்ட பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த மத்திய இடைநிலை கல்வி திட்டம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் அவர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. தமிழ் ஆசிரியர்களுக்கு 11 முதல் 13-ம் தேதி வரையும், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு 23 முதல் 25-ம் தேதி வரையும், கணித ஆசிரியர்களுக்கு 30 முதல் நவம்பர் 1-ம் தேதி வரையும் நடைபெறும் என்று ஆர்எம்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.