
வடசென்னையில் புதிய ஐடிஐ பயிற்றுநர் பணிக்கு ஆள்தேர்வு அக்.10 விண்ணப்பிக்க கடைசி நாள் | வட சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு ஐடிஐக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்.10-ம் தேதி கடைசி நாளாகும். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு ஐடிஐயில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில், பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மின்சார பணியாளர் பணிக்கு 3 ஆண்டு மின்னியல் அல்லது மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலில் பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். அதே நிலையில் மற்றொரு பதவிக்கு எலெக்ட்ரீஷியன் டிரேடில் என்டிசி, என்ஏசி கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு ஆதிதிராவிடர், அருந்ததியர் பெண்கள், ஆதரவற்ற விதவைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கம்மியர் குளிர்பதனம் மற்றம் தட்ப வெப்பம் கட்டுப்படுத்துதலுக்கு, மெக்கானிக்கல் பொறியியல் பட்டயம் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே நிலையில் மற்றொரு பதவிக்கு குளிர்பதனம் மற்றும் தட்ப வெப்பம் கட்டுப்படுத்துதலில் என்டிசி அல்லது என்ஏசி முடித்த பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு அரசு நிர்ணயித்த வயது வரம்பு பொருந்தும். மேலும், விவரங்களுக்கு 044-25209268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சென்னை -600021 என்ற முகவரியில் அக்.10-ம் தேதி மாலைக்குள் சுய விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | வட சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு ஐடிஐக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்.10-ம் தேதி கடைசி நாளாகும். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு ஐடிஐயில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில், பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மின்சார பணியாளர் பணிக்கு 3 ஆண்டு மின்னியல் அல்லது மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலில் பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். அதே நிலையில் மற்றொரு பதவிக்கு எலெக்ட்ரீஷியன் டிரேடில் என்டிசி, என்ஏசி கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு ஆதிதிராவிடர், அருந்ததியர் பெண்கள், ஆதரவற்ற விதவைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கம்மியர் குளிர்பதனம் மற்றம் தட்ப வெப்பம் கட்டுப்படுத்துதலுக்கு, மெக்கானிக்கல் பொறியியல் பட்டயம் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே நிலையில் மற்றொரு பதவிக்கு குளிர்பதனம் மற்றும் தட்ப வெப்பம் கட்டுப்படுத்துதலில் என்டிசி அல்லது என்ஏசி முடித்த பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு அரசு நிர்ணயித்த வயது வரம்பு பொருந்தும். மேலும், விவரங்களுக்கு 044-25209268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சென்னை -600021 என்ற முகவரியில் அக்.10-ம் தேதி மாலைக்குள் சுய விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.