புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
.பி.எஸ்.இ., அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள், தங்களது பதிவெண்ணை பதிவிட்டு முடிவுகளை பார்க்க முடியும். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சான்றிதழ்கள் டிஜிலாக்கர் செயலியிலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
digilocker.gov.in என்ற முகவரியில், சி.பி.எஸ்.இ.,யில் பதிவு செய்த மொபைல் எண் மூலம் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.