மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, நாளை மறுநாள் முடிகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான, ‘நீட்’ தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 9ல் துவங்கியது. இந்த பதிவு, நாளை மறுநாள் இரவு, 11:30 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கானகட்டணத்தை, மார்ச், 10 இரவு, 11:30 மணிக்குள் செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.