மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பிரசார திட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக ஒரு பிரசார திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னை கோட்டையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும், லீடு என்ற அமைப்பும் சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளன. மாணவர்களின் இன்னல்கள், பெற்றோர்களின் சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஆகியவற்றை நீக்கி விடை தெரியாத பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்க உள்ளது. மன நலம் சார்ந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் டுவிட்டர், முகநூல், வாட்ஸ்-அப் மூலம் பிரச்சினைகளை தெரிவிக்கலாம். தொடர்புகொள்ள வாட்ஸ் அப் செல்நம்பர் 7373002426, முகநூல் Tamilnadu govt.Exam stress Relief, டுவிட்டர் முகவரி: @TNSchoolEdudept., இ-மெயில் முகவரி : ednstressrelief@gmail.com ஆகியவற்றை அணுகலாம். இந்த தகவலை கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.