பிப்., 6 முதல், செய்முறை தேர்வுகளை நடத்துமாறு, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மாநில பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச் மாதம், பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.இதில், பிளஸ் 1, பிளஸ் 2வில் மட்டும், 16 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, செய்முறை தேர்வு பயிற்சிகள் துவங்கியுள்ளன. பயிற்சி வகுப்புகள் முடியும் நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில், பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து பள்ளிகளிலும், தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி, அக மதிப்பீடு மதிப்பெண் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் வருகை பதிவு, செயல்பாடுகள் அடிப்படையில், இந்த மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.அதேபோல், பிப்., 6ல், செய்முறை தேர்வுகளை துவங்க வேண்டும். இந்த தேர்வுகளை, எந்த குளறுபடியும் இல்லாமல், வினாத்தாள் தயாரித்து, முறைகேடின்றி நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது