பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அறிவியல் பாடங்கள் தொடர்பாக, ஒருங்கிணைந்த, ஐந்து ஆண்டு, எம்.எஸ்சி., படிப்பில் சேர, நெஸ்ட் என்ற தேசிய நுழைவு மற்றும் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். புவனேஷ்வரில் உள்ள, தேசிய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், மும்பையில் உள்ள அணுசக்தி துறையின் சீர்மிகு அறிவியல் மையம் ஆகியவற்றில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகையும், கோடைகால பயிற்சிக்கு, 20 ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும். இந்த படிப்புக்கான நுழைவு தேர்வு, ஜூன், 1ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆன்லைன் பதிவுகள், ஜன., 7ல் துவங்கின; மார்ச், 11 வரை விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்ளலாம் என, அவகாசம் தரப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை, www.nestexam.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.