திறன் மேம்பாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் வே.அன்புசெல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள், தொழில் பழகுநர்கள், தொழிற்சாலை பணியாளர்களின் புதிய கண்டு பிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் திறனாய்வு போட்டிகள் செப். 27-ல் நடத்தப்பட உள்ளன. கண்டுபிடிப்புகள், வருங்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், புதுவகை சாப்ட்வேர் கண்டுபிடிப்புக்கான செயல்விளக்கத்துடன் கலந்து கொள்ளலாம். முதலிடம் பெறுவோருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.skiltraining.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 044-22501530 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.