ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு செப். 4 உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப். 4 (திங்கள்) அன்று சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதனை ஈடுசெய்யும் வகையில் செப். 23 (சனி) அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.
இருப்பினும் செப். 4-ம் தேதி அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.