
ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ராஷ்பேஷ், மைக்கேல் டபிள்யூ யங்.
மூலக்கூறுகளின் செயல்பாடுகளை ஆராய்ந்த 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்குமருத்துவத்துக்கான நோபல் பரிசு | மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டுஅமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுவீடனைச் சேர்ந்தவிஞ்ஞானி ஆல்பிரட் நோபல் சிறந்த பொறியாளர், பலவிதமான வெடிபொருட்களைகண்டுபிடித்தவர். பல ஆயுதத் தொழிற்சாலைகளையும் நிறுவியவர். இவருடையசகோதரர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தார். அப்போது, ஆல்பிரட்நோபல் இறந்துவிட்டதாக தவறாக கருதி, ‘மரண வியாபாரி மரணம்’ என்று செய்திகள்வெளியாயின. இதனால் மனம் வருந்திய ஆல்பிரட் நோபல், தான் சம்பாதித்த பணத்தில்பெரும் தொகையை மனித குல நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு வழங்க வேண்டும்என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி அவருடைய பெயரில் நோபல் பரிசுகள்வழங்கப்படுகின்றன. மருத்துவம், கலை, அமைதி என பல துறைகளில் சிறந்தபங்களிப்பை வழங்கி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிப்பு நேற்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில்தொடங்கியது. முதல் நாள் மருத்துவக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள்அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ராஷ்பேஷ்மற்றும் மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசுபகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை நோபல் பரிசுக்குழு தலைவர் தாமஸ்பெர்ல்மன் நேற்று வெளியிட்டார். இந்த பூமியில் வாழும் தாவரங்கள், விலங்குகள்,மனிதர்கள், பூமியின் சுழற்சி, பரிணாம வளர்ச்சிக்கேற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்கின்றன. அதற்கு உடலுக்குள் உள்ள உயிர் சக்கரம் (பயலாஜிக்கல் கிளாக்) உறக்கம்,உணவு முறை, ஹார்மோன்களை வெளியிடுதல், ரத்த அழுத்தம் போன்றவற்றைகட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. அது எப்படி செயல்படுகிறது, ஒவ்வொருஉயிரையும் பாதுகாக்க மரபணு எப்படி பங்காற்றுகிறது என்பதை இவர்கள் மூவரின்கண்டுபிடிப்புகள் விளக்குகின்றன என்று நோபல் பரிசு குழு கூறியுள்ளது. நோபல் பரிசுதொகை மூன்று விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இயற்பியல் துறையில் சிறந்தபங்களிப்புக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.