தமிழகத்தில் புதிதாக 11 சார் ஆட்சியர்கள் நியமனம் | தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிதாக 11 சார் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று இரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருக்கோவிலூருக்கு சாருஸ்ரீ, திண்டிவனத்துக்கு ஐ.எஸ்.மெர்சி ரம்யா, பழநிக்கு எஸ்.அருண்ராஜ், தூத்துக்குடிக்கு எம்.எஸ்.பிரசாந்த், பத்மநாபபுரத்துக்கு ராஜகோபால் சுங்காரா, நாமக்கல்லுக்கு கிராந்தி குமார் பாதி, மயிலாடுதுறைக்கு பி.பிரியங்கா, பரமக்குடிக்கு பி.விஷ்ணு சந்திரன், புதுக்கோட்டைக்கு கே.எம் சராயு, திருச்சிக்கு ஏ.கே கமல் கிஷோர், தேவகோட்டைக்கு ஆஷா அஜித் ஆகியோர் சார் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று இரவு பிறப்பித்தது.