
நீட் தேர்வுக்கான கட்டணத்தை ஆகஸ்ட்டு 10ஆம் தேதி இரவு 11:50 மணி வரை செலுத்தலாம்.
மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதுவரை தமிழ் உட்பட, 11 மாநில மொழிகளில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், பஞ்சாபி மற்றும் மலையாள மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, 198 நகரங்களில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை, neet.nta.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தேர்வுக்கான கட்டணத்தை, ஆகஸ்ட்டு 10ஆம் தேதி இரவு 11:50 மணி வரை செலுத்தலாம். வரும் 11ஆம் தேதி முதல், 14ஆம் தேதி மதியம் 2 மணி வரை, ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்”என்று அதில் கூறப்பட்டுள்ளது.