நாட்டிலேயே முதல் முறையாக, தனியார் கல்வி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரம்மகப்பேறு கால விடுமுறை அளிக்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. – மத்திய அரசு கொண்டு வந்த மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தின்படி, அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு கால விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையை தனியார் கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரி யைகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கும் வழங்கும் வகை யில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க கேரள சட்டப் பேரவை யில் கடந்தமாதம் 29-ஆம் தேதிதீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, தனியார் கல்வி துறையில் பணியாற் றும் பெண்கள், ஆசிரியைகளுக் கும் மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தின் சலுகைகள் நீட்டிக்கப் படுகின்றன. இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்ட வியாழக்கிழமை அறி விக்கையில் கூறப்பட்டுள்ளதா தனியார் கல்வி துறை மற்றும் முறைசாரா பள்ளிக்கல்வி துறைக ளில் பணியாற்றும் பெண்கள், அசி ரியைகளுக்கு மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தின் சலுகை களை அளிப்பதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்ததை படுத்து இந்தச் சட்டம் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது. மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தை, தனியார் கல்வி துறைப் பணியாளர்களுக்கு நீட்டிக்கும் முதல் மாநிலம் கேரளம் ஆகும். மேலும், கர்ப்பிணிகளின் மருத்துவச்செலவுகளுக்காக, அவர்கள் பணியாற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ. 1000 வழங்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.